அருமையான சுவையில் கேரளா ஸ்டைல் நெய் அப்பம் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
வெல்லம் – 300 கிராம்
அரிசி மாவு – அரை கிலோ
Advertisment
Advertisements
ஏலக்காய் பொடி – அரை டீஸ்பூன்,
எள்ளு – 2 டீஸ்பூன்
நெய் – கால் கப்உப்பு – தேவையான அளவு
சோடா உப்பு – கால் டீஸ்பூன்
எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு
செய்முறை:
முதலில், அடுப்பில் ஒரு பான் வைத்து அரை லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து, துருவிய வெல்லத்தை அதனுடன் சேர்த்து பாகு வடிவில் செய்யவும். இந்த வெல்ல பாகு 3 நிமிடங்கள் கொதித்தவுடன், அதை இறக்கி தனியாக வைத்துவிடவும்.
அடுத்து ஒரு பானில் எள்ளை வருத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பவுலில், பச்சை அரிசி மாவை சேர்த்து அதில், வறுத்த எள்ளு, தேவையான அளவு உப்பு, ஏலக்காய் பொடி, சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து இந்த மாவில் வெல்லபாகை சேர்த்து கட்டி இல்லாமல் கரைக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கரைத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு அதில் கால் கப் நெய் ஊற்றி கரைக்கவும்.
இந்த கலவையை 4 மணி நேரம் ஊறவைத்து, அதன்பிறகு எடுத்து, அதில் சோடா உப்பு சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கரைத்து எண்ணெயில் ஊற்றி பொறித்து எடுத்தால் சுவையான நெய் அப்பம் தயார்.