செஃப் தீனா ஸ்டைலில் திண்டுக்கல் தால்ச்சா செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 200 கிராம்
பருப்பு பருப்பு - 100 கிராம்
Advertisment
Advertisements
கத்திரிக்காய் - 1 கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 100 கிராம்
பூண்டு விழுது - 50 கிராம்
இஞ்சி விழுது - 25 கிராம்
மிளகாய் தூள் - 8 கிராம்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி தூள் - 8 கிராம்
புளி - 50 கிராம்
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் - தேவைக்கேற்ப
கடலை எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில்,துவரம்பருப்பு மற்றும் கடலைப் பருப்பை வேகவைத்து அதில், எலும்புக்கறி, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். அடுத்து ஒரு பாத்திரத்தில், நறுக்கிய கத்தரிக்காய், அரைத்த சின்ன வெங்காயம் பேஸ்ட், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்டை சேர்க்கவும்.
அதன்பிறகு, மல்லி இலை, மிளகாய் தூள், மல்லித்தூள், சேர்த்து கடலை எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். அதன்பிறகு் காய் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கத்தரிக்காய் வெந்தவுடன், வேகவைத்து எடுத்துள்ள பருப்பு மட்டன் கறி கலவையை சேர்க்கவும்.
பருப்பு தண்ணீரும் கத்தரிக்காய் கலவையும் சேர்த்து கொதித்தவுடன், அதனுடன் புளி கரைசலை சேர்த்து வேக வைக்கவும். இறுதியாக கரம் மசாலா பொடி சேர்த்து இறக்கினால் சுவைனா தால்ச்சா ரெடி.