தக்காளி வெங்காயம் இல்லாமல், அப்பளத்தை வைத்து வத்த குழம்பு எப்படி செய்வது என்பதை செப் தீனா சொல்வதை கேட்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
அப்பளம் – 5
கடலைப்பருப்பு – 50 கிராம்
Advertisment
Advertisements
துவரம்பருப்பு – 50 கிராம்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
வர மிளகாய் -5
சாம்பார் பொடி – 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் 2 டேபிள் ஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
கருவேப்பிலை, மல்லி தேவையான அளவு
வெல்லம் – சிறிதளவு
நல்லெண்ணெய் – கால் லிட்டர்
செய்முறை
ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில், நல்லெண்ணெய் சேர்த்து, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
அதன்பிறகு அப்பளத்தை 4ஆக உடைத்து அதில் சேர்த்து கிளரவும். அடுத்து வரமிளகாய் சேர்த்து தாளித்து, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
அடுத்து கரைத்து வைத்துள்ள புளி கரைசலை அதில் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்தவுடன், அதில் சிறிதளவு வெல்லம் சேர்க்கவும்.
வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து அதன்பிறகு கருவேப்பிலை மல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான அப்பளம் வத்தக் குழம்பு ரெடி. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.