சுவையான ரசம் ஈஸியான செய்வது எப்படி என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒன்னறை டீஸ்பூன்
வெந்தயம் – 8 அல்லது 9
காய்ந்த மிளகாய – ஒன்று
பூண்டு – 8
புளி – நெல்லிக்காய் அளவு
தக்காளி – ஒன்று பெரியது
கருவேப்பிலை – சிறிதளவு
மல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் பொடி – சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
வரமிளகாய் – 2
பச்சை மிளகாய் – ஒன்று
பெருங்காயப்பொடி – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, மிளகு, சீரகம், வரமிளகாய், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அதன்பிறகு அதில் பூண்டு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
புளியை நன்றாக கரைத்து, அந்த கரைசலில், தக்காளி, நறுக்கிய கருவேப்பிலை மல்லி, உப்பு, மஞ்சள் பொடி ஆகிவற்றை சேர்த்து, கலக்கவும்.
அதன்பிறகு ஒரு பானில், எண்ணெய் விட்டு, கடுகு சேர்த்து 2 வரமிளகாய், கருவேப்பிலை மல்லி நறுக்கி சேர்த்து தாளிக்கவும். அதில், அரைத்து வைத்திருக்கும் மிளகு சீரகத்தை சேர்த்து தாளிக்கவும்.
நன்றாக வதங்கியதும், அதில் புளி தக்காளி கரைசலை சேர்த்து, தாளிக்கவும். இறுதியாக இதில் சிறிதளவு பெருங்காய பொடி சேர்த்து மல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான ரசம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“