மாலை வேளையில் சாப்பிட தூண்டும் சுவையான வாழைக்காய் பஜ்ஜி எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு – 100 கிராம்
மைதா – 150 கிராம்
Advertisment
Advertisements
கடலைமாவு – 150 கிராம்
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
ஆப்ப சோடா – ஒரு டீஸ்பூன்
இட்லி மாவு – 2 ஸ்பூன்
கலர்பொடி – ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில், வாழைக்காயை நுனியிலும் அடியிலும் நறுக்கிவிட வேண்டும். அடுத்து வாழைக்காய் சீவும் கட்டையில் சிறிதளவு எண்ணெய் தடவி, நறுக்கி வைத்த வாழைக்காயை அதில் வைத்து நைசாக சீவி வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில், பச்சரிசி மாவு, மைதா, பெருங்காயத்தூள், ஆப்ப சோடா, இட்லி மாவு, கலர்பொடி அனைத்தையும் ஒன்றாக கலந்து, பதமாக பிசைந்து, வாழைக்காயை அதில் தடவி எடுத்து எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான வாழைக்காய் பஜ்ஜி ரெடி.