பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள் மக்கானா என்று அழைக்கப்படும் தாமரை விதைகள். இவை பெரும்பாலும் வறுத்த அல்லது பொரித்த நிலையில் சிற்றுண்டியாக உட்கொள்ளப்படுகின்றன. இதில் மெக்னீசியம் மற்றும் குறைந்த சோடியம் உள்ளடக்கம் காரணமாக, இவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இந்த மக்கானா வைத்து, சுவையான மக்கானா டிக்கி எப்படி செய்வது என்பதை பார்ப்போம்
தேவையான பொருட்கள்:
வறுத்த மக்கானா: 1 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு: 1 பெரியது
பச்சை மிளகாய்: 1
துருவிய இஞ்சி அரை டீஸ்பூன்
கொத்தமல்லி இலை: ஒரு கைப்பிடி
சாட் மசாலா: அரை டீஸ்பூன்
சீரகத்தூள்: அரை டீஸ்பூன்
கரம் மசாலா: கால் டீஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
ரவை: 2 டீஸ்பூன்
எண்ணெய்: தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, பொடித்த மக்கானா, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கொத்தமல்லி இலை, சாட் மசாலா, சீரகத்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்து இந்தக் கலவையை சிறிய டிக்கி அல்லது கட்லெட் வடிவத்தில் உருவாக்கவும். ஒவ்வொரு டிக்கியையும் ரவையில் நன்கு புரட்டவும். அடுத்து ஒரு தவா அல்லது கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, டிக்கிகளை மிதமான தீயில் பொன்னிறமாகும் வறுத்து எடுத்து, புதினா சட்னி அல்லது தக்காளி சாஸுடன் சூடாகப் பறிமாறலாம்.