மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும் ஒரு அற்புதமான உணவு. பச்சரிசியுடன் தேங்காய் மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்த்து சமைக்கப்படும் இந்த சோறு, அதன் தனித்துவமான சுவைக்காகவும், மணத்திற்காகவும் புகழ் பெற்றது. பெரும்பாலும் கிராமப்புறங்களிலும், தென் மாவட்டங்களிலும் இது ஒரு பிரதான உணவாகவும், விசேஷ நாட்களில் தயாரிக்கப்படும் உணவாகவும் திகழ்கிறது.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கிலோ
தேங்காய் (அரை மூடி) - 1
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1 அல்லது 2
பச்சை மிளகாய் - 4 முதல் 5
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை - 1 துண்டு
கிராம்பு 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 3 முதல் 4
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
சோம்பு - 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தேங்காய் எண்ணெய் - 2 கரண்டி
செய்முறை:
முதலில், தேங்காய், லவங்க பட்டை, மஞ்சள் தூள், பெருஞ்சீரகத்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து தண்ணீர் விட்டு மிக்சியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் வெந்தயம், பட்டை, லவங்கம், சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன் பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
இறுதியாக கறிவேப்பிலை சேர்த்து அரைத்த தேங்காய் பேஸ்டை சேர்த்து வதக்கவும். அதன்பிறகு அரிசி வேகும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதித்தவுடன், கழுவி வைத்துள்ள அரிசியை அதில் சேர்க்கவும்.
அரிசி வெந்து தண்ணீர் இல்லாமல் ஆனவுடன், அடுப்பை அனைத்துவிட்டு, மூடிப்போட்டு மூடி தம் போட்டுவிட வேண்டும். அவ்வளவு தான் சுவையான மஞ்சள் சோறு ரெடி. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.