உடல் எடையை குறைக்க விரும்புவர்கள், இந்த மசாலா சேர்த்த மக்கனா (தாமரை விதைகள்) செய்து சாப்பிடுங்கள். பெரிய பலன் கிடைக்கும்.
Advertisment
தேவையான பொருட்கள்:
வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
மக்கானா - 50 கிராம்
Advertisment
Advertisements
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சாட் மசாலா தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
ஒரு அகலமான பாண் எடுத்து அடுப்பில் வைத்து பாண் சூடானவுடன் அதில், வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் உருகி சூடானவுடன் அதில், 50 கிராம் மக்கானாவை சேர்ககவும்.
மக்கானா 10 நிமிடங்கள் வறுத்து பொன் நிறமாக ஆனவுடன், அடுப்பை ஆப் செய்துவிட்டு அதில், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
அடுத்து, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தாள், சாட் மசாலா தூள் ஒன்றன் ஒன்றாக சேர்த்து நன்றாக கிளறி விடவும். இறுதியாக மக்கானாவில் மசாலா ஒட்டுவதற்காக, பாணில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து பிரட்டவும்.
அதன்பிறகு ஒரு பவுலில் எடுத்து வைத்து பரிமாறலாம். சுவையான மசாலா மக்கானா ரெடி. ட்ரை பண்ணி பாருங்க.