அலுவலகம் செல்ல வேண்டும் என்பதற்காக காலையில் அவசர அவசரமாக எழுந்து சமைக்கிறீர்களா? நீ்ங்கள் நிதானமாக எழுந்து, சீக்கிரமாக எளிதில் செய்து முடிக்க கூடிய தோசை ரெசிபி இருக்கிறது எது என்ன என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
தக்காளி – 3
வெங்காயம் – 3
பூண்டு – 6 பல்
கோதுமை மாவு – கால் கப்
அரிசி மாவு – ஒரு கப்
ரவை – அரைகப்
மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில் தக்காளி வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அதில், கோதுமை மாவு, மிளகாய் தூள், அரிசி மாவு, ரவை ஆகியவற்றை சேர்த்து அரைக்க வேண்டும்.
இறுதியாக தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். நீங்கள் ரவா தேவை மாதிரி செய்ய வேண்டும் என்றால் மாவில் தண்ணீர் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். சாதாரண தோசை போல் செய்ய வேண்டும் என்றால் தண்ணீரின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.
இறுதியாக இந்த மாவை தேசை கல்லில் ஊற்றி எடுத்தால் சுவையாக தேவை ரெடி. காலையில் அவசரம் இல்லாமல் எழுந்து சிறிது நேரத்தில் செய்யக்கூடிய இந்த தோசைக்கு உடுப்பி தோசை என்று பெயர், தேங்காய் மற்றும் காரச்சட்னியுடன் இதை பரிமாறலாம்.