தோசை, சப்பாத்தி எல்லாத்தோடும் சாப்பிடுற மாதிரி ரொம்ப ஈஸியான சைடிஷ் ஏதாவது செய்ய வேண்டுமா? இந்த மாதிரி காளான் வைத்து ஈஸியாக ரெசிபி செய்யலாம். இதை தோசை, சப்பாத்தி மட்டும் இல்லாமல், கீரையுடனும் சாப்பிடலாம். இதில் காளான்கள் மட்டும் இல்லாமல், நீங்கள் பன்னீர், அவிச்ச முட்டையிலும் செய்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
வெண்ணெய் - 5 முதல் 10 கிராம்
பூண்டு (நறுக்கியது அல்லது இடித்தது) - 2 பெரிய பற்கள்
வெங்காயம் (நறுக்கியது) - ½
காளான் - 200 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் செதில்கள் (Chilli flakes) - ½ தேக்கரண்டி (அதிக காரம் தேவைப்பட்டால் மேலும் சேர்க்கவும்)
மிளகு - ½ தேக்கரண்டி
செய்முறை:
ஒரு வாணலியில் பட்டர் சேர்த்து, இரண்டு பூண்டுகளைப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பூண்டின் பச்சை வாசனை மாறியதும், பாதி பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்த்து, வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்குங்கள். காளான்களை இந்த மாதிரி சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.
காளானைச் சேர்த்து சமைக்கும் போது, காளானிலிருந்து தண்ணீர் விடும். தண்ணீர் வற்றி, காளான் இந்த மாதிரி வெந்த பிறகு, இதில் உப்பு, அரை டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ், அரை டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலந்தால், சுவையான சைடிஷ் தயார்!