மழை காலத்தில் சுடச்சுட காளான் சூப் பருகும் குடிக்கும் அனுபவம் அருமையாக இருக்கும். அந்த வகையில் ரோட்டு கடையில் காளான் சூப் குடிக்கும் அனுபவத்தை வீட்டில் இருந்தே பெறுவது எப்படி, வீட்டுக் கிச்சனில் காளான் சூப் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்
தேவையான பொருட்கள்:
காளான் - 200 கிராம்
பூண்டு - 5-6 பல்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பெரிய வெங்காயம் - 1
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கான்ஃப்ளார் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு கனமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதன் நறுமணம் சமையலறை முழுவதும் பரவும்.
அடுத்து, நறுக்கி வைத்திருக்கும் காளான்களைச் சேர்த்து, அவை சுருங்கும் வரை நன்றாக வதக்கவும்.
காளான்கள் வதங்கியதும், சீரகத்தூள், கரம் மசாலா, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இரண்டு சொம்பு தண்ணீர் சேர்த்து, சூப்பை கொதிக்க விடவும். சூப் நன்கு கொதித்ததும், கரைத்து வைத்திருக்கும் கான்ஃப்ளாரை சூப்புடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
மீண்டும் கொஞ்சம் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும், காரத்திற்குத் தேவையான மிளகுத்தூளையும் சேர்க்கவும்.கடைசியாக, ஒரு கைப்பிடி கொத்தமல்லித்தழைகளைத் தூவி, சூப்பை ஒரு முறை கிளறி அடுப்பை அணைக்கவும். இப்போது சுவையான காளான் சூப் ரெடி.