நீரிழிவு நோயாளிகளுக்கு ரொம்ப நல்லது... செஃப் வெங்கடேஷ் பட் சொன்ன பீர்க்கங்காய் சட்னி; குழி பணியாரத்துக்கு அப்படி இருக்கும்!
சருமம் மற்றும் கண்பார்வையை மேம்படுத்தும் திறன்கொண்ட பீர்க்கங்காயில், கல்லீரல் பாதுகாப்பு, மலச்சில்கலுக்கு தீர்வு, உடலில் புண்கள் மற்றும் சொறி சிரங்குகளை போக்கவும் பயன்படுகிறது.
சருமம் மற்றும் கண்பார்வையை மேம்படுத்தும் திறன்கொண்ட பீர்க்கங்காயில், கல்லீரல் பாதுகாப்பு, மலச்சில்கலுக்கு தீர்வு, உடலில் புண்கள் மற்றும் சொறி சிரங்குகளை போக்கவும் பயன்படுகிறது.
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிக்கும் வல்லமை காய்கறிகளுக்கு உண்டு. குறிப்பிட்ட சில காய்கறிகள் நமக்கு பெரிய நன்மைகளை வழங்குகிறது. அந்த வகையிலான ஒரு காய் தான் பீர்க்கங்காய். உடல் சூட்டை தணிக்கும் முக்கிய அம்சம் கொண்ட இந்த காயில், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Advertisment
சருமம் மற்றும் கண்பார்வையை மேம்படுத்தும் திறன்கொண்ட பீர்க்கங்காயில், கல்லீரல் பாதுகாப்பு, மலச்சில்கலுக்கு தீர்வு, உடலில் புண்கள் மற்றும் சொறி சிரங்குகளை போக்கவும் பயன்படுகிறது. கலோரிகள் குறைந்து ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் பீர்க்கங்காய் நம் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த பீர்க்கங்காய் வைத்து வெங்கடேஷ் பட் ஸ்டைலில் சட்னி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நறுக்கிய பீர்க்கங்காய் – கால் கிலோ
Advertisment
Advertisements
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 8
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் துருவல் – ஒரு மூடி
புளி கரைசல் – ஒரு கப்
வெல்லம் – 50 கிராம்
உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், நல்லெண்ணெய், ஒளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். அடுத்து காய்ந்த மிளகாய்யை அதனுடன் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில், நறுக்கிய பீர்க்கங்காயை சேர்த்து, கறிவேப்பிலை, தேங்காய் துருவல், வெல்லம், புளி கரைசல் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
இந்த கலவையை சூடு ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தால் சுவையான பீர்க்கங்காய் சட்னி தயார். கடலை எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயத்தூய், சேர்த்து தாளித்து கொட்டினால் சுவையான பறிமாறலாம்