அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான பூரி உப்பலாக செய்வது எப்படி என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 3 கப்
ரவை – கால் கப்
உப்பு – ஒன்னறை டீஸ்பூன்
உருளைக்கிழங்கு மசாலா செய்ய
உருளைக்கிழங்கு – 3 பெரியது
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 10 முழுதாக
நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 10
வெங்காய் – 6 பெரியது
பெருங்காயப்பொடி – கால் டீஸ்பூன்
கடலைமாவு – அரைகப்
செய்முறை
முதலில், ஒரு குக்கரில், 3 உருளைகிழங்கை 2ஆக கட் செய்து வேக வைக்கவும். அதன்பிறகுகோதுமை மாவு, ரவை, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, சாப்பாத்திக்கு பிசைவதை போல், இருக்கமாக இல்லாமல், சற்று லேசாக இருக்கும் வகையில் பிசைந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
குக்கரில் வேக வைத்த உருளைக்கிழங்கை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பானில், எண்ணெய் விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வறுக்கவும்.
அதன்பிறகு அதில், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வறுபட்டவுடன், அதில் வெங்காயம் சேர்த்து வேக வைக்கவும்.
வெங்காயம் நன்றாக வெந்தவுடன், அதில், பெருங்காய பொடி சேர்த்து, வேக வைத்து எடுத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து அதில் சேர்க்கவும்.
இந்த கலவையை தண்ணீர் விட்டு வேக வைக்கவும். நன்றாக வெந்தவுடன், கடலைமாவை கட்டி இல்லாமல் கரைத்து அதில் சேர்க்கவும். கடலைமாவு பச்சை வாசனை போகும்வரை கொதிக்க வைக்கவும்.
இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து இறக்கி அதில் கால் டீஸ்பூன் அளவுக்கு எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவையான பூரி உருளைக்கிழங்கு மசால் தயார்.
அதன்பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து, சிறுசிறு உருண்டைகளாக பிரித்து, அந்த உருண்டைகளை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து, நன்றாக காய்ந்த எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான பூரி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“