வீட்டில் அடிக்கடி பூரி செய்யும் வழக்கம் இருக்கிறதா? அப்படி என்றால் இந்த மாதிரி உருளைக்கிழங்கு மசாலாவை செய்து சாப்பிட்டு பாருங்க. மிகவும் சுவையாக இருக்கும் பூரியும் சட்டுனு காலியாகும். இந்த மசாலா எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
பூரி செய்ய
கோதுமை மாவு – ஒரு கப்
ரவை – ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்’
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
ஓமம் – கால் டீஸ்பூன்
காய்ந்த வெந்தய கீரை மற்றும் உப்பு
கேரட் – 2
உருளைக்கிழங்கு மசாலா செய்ய
தக்காளி – 2 வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
கரம் மசாலா, சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம் ஒரு டீஸ்பூன்
வேக வைத்து மசிந்த உருளைக்கிழங்கு – ஒரு கப்
கொத்தமல்லி, காய்ந்த வெந்தய கீரை – சிறிதளவு
செய்முறை:
முதலில், கேரட்டை துருவி மிக்ஸியில் அரைத்து கூழாக எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு, கோதுமை மாவு, ரவை, மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத்தூள், ஓமம், காய்ந்த வெந்தய கீரை, தேவையான அளவு உப்பு, அரைத்த கேரட் கூழ் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கரம் மசாலா, சீரகத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் சேர்த்து பொறித்தவுடன், வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவம்.
இறுதியாக, அரைத்து வைத்துள்ள கலவையை அதனுடன் சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறுதியாக காய்ந்த வெந்தய கீரை, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால், சுவையாக உருளைக்கிழங்கு மசாலா ரெடி.
அதன்பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டையாக எடுத்து உருட்டி எண்ணெயில் போட்டு எடுத்தால் சுவையான பூரியும் ரெடி. இரண்டயும் பரிமாறி சாப்பிடலாம்.