சப்பாத்திக்கு காம்பினேஷனை மாத்தி ட்ரை பண்ணதே இல்லைனா, இதை ட்ரை பண்ணிப் பாருங்க. வெறும் உருளைக்கிழங்கை மட்டும் வைத்து ஆட்டுக்கால் பாயா டேஸ்ட்டில் ஒரு வெஜிடபிள் பாயா எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தேங்காய்
முந்திரி
இஞ்சி
பூண்டு
பச்சை மிளகாய்
மிளகு
சோம்பு
கொஞ்சம் புதினா இலை
பொட்டுக்கடலை
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் மேலே குறிப்பிட்ட பொருட்களைச் சேர்த்து, தண்ணீர் விட்டு நல்ல பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் குக்கரை வைத்து, கொஞ்சம் நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர், பாதி வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டையும் ஊற்றி நன்றாகக் கிளறவும். குக்கரை மூடி, ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கினால், சுவையான வெஜிடபிள் பாயா தயார்! டேஸ்ட் பிரமாதமாக இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணிப் பாருங்க!