தேங்காயும் நிலக்கடலையும் இல்லாமல் சுவையான மதுரை ஸ்டைல் தண்ணி சட்னி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
எண்ணெய் 2 டீஸ்பூன்
பொட்டுக்கலை – ஒரு கப்
வரமிளகாய் – 6
இஞ்சி – சிறிதளவு
பூண்டு 6 பல்
வெங்காயம் – 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி
சீரகம் ஒரு டீஸ்பூன்
புளி – ஒரு சின்ன நெல்லிக்காய் சைஸ்
உப்பு தேவையான அளவு
தாளிக்க: எண்ணெய், கடுகு, கடலைப்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை
செய்முறை
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய், வரமிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கம், வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், வதக்கவும்.
இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, ஒரு சிறிய சைஸ் புளி, தேவையாள அளவு உப்பு, ஒரு கப் பொட்டுக்கடலை சேர்த்து அரைக்கவும். அடுத்து ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
இறுதியாக கறிவேப்பிலை சேர்த்து, அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை விழுதில் சேர்த்து தண்ணீர் சேர்த்து கிண்டினால் சுவையான தண்ணி சட்னி ரெடி. நீங்களும் ட்ரைப்பண்ணி பாருங்க.