இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான ரோட்டுக்கடை சட்னி எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
வரமிளகாய் – 12
வெங்காயம் – பெரியது 1
பூண்டு – தோலுடன் 5
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
பெருங்காய பொடி – சிறிதளவு
செய்முறை:
முதலில் வரமிளகாயை வெந்நீரில் 5 நிமிடம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொண்டு, அதில், நறுக்கிய வெங்காயம், பூண்டு, புளி, தேவையாள அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
இந்த கலவையை தனியாக வைத்துக்கொண்டு, ஒரு பானில், நல்லெண்ணெய் விட்டு, அதில் கடுகு, கருவேப்பிலை, பெருங்காயப்பொடி சேர்த்து தாளித்து, அரைத்து வைத்த கலவையில் சேர்த்தால் சுவையான ரோட்டுக்கடை சட்னி தயார்.
இட்லி, தோசை என அனைத்திற்கும் இந்த சட்னி சுவையாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“