கல்யாண வீடுகளில் செய்யும் சுவையான ரசத்தை நம் வீட்டில் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்
Advertisment
தேவையான பொருட்கள்:
தக்காளி – கால் கிலோ
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
Advertisment
Advertisements
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒன்னறை டீஸ்பூன்
மல்லி – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயப்பொடி – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
பூண்டு – ஒரு கைப்பிடி
நல்லெண்ணெய் – 50 எம்.எல்.
கடுகு ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
வரமிளகாய் – 5
கருவேப்பிலை ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில், தக்காளியை நன்றாக வேக வைத்து மிக்ஸியழலட அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து சீரகம், மிளகு, மல்லி இவற்றை அரைத்து தனியாக எடுத்துக்கொண்டு, அதில் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
அடுத்து, பச்சை மிளகாய், பூண்டு ஆகிய இரண்டையும் மிக்ஸியழல் குறகுறப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு பான் வைத்து அதில் நல்லெண்ணெய், சேர்த்து, வெந்தயம், வரமிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதங்கியதும், பச்சை மிளகாய் பூண்டு கலவையை சேர்க்கவும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை அதனுடன் சேர்க்கவும். இந்த கலவை நன்றாக கொதித்து, கிரேவி அளவுக்கு வரும்போது, அதில் புளி கரைசலை சேர்க்கவும். இந்த கரைசல் நன்றாக கொதித்து நுரை அடங்கியவுடன், அதில் கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கினால் சுவையான கல்யாண வீ்ட்டு ரசம் ரெடி. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.