நீண்ட நாட்களாகவே நமக்குத் தெரியாத ஒரு அற்புதமான பிரியாணி ரெசிப்பியைப் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம். இது வேறு எந்த பிரியாணியையும் விட தனித்துவமான சுவை கொண்டது. சோம்ப்பெரி சிக்கன் பிரியாணிதான் அது. இதன் சுவை உங்களை ஆச்சரியப்பட வைக்கும்.
தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி: 1 கிலோ
சிக்கன் லெக் பீஸ்: 6 பெரிய துண்டுகள்
பூண்டு: 150 கிராம்
இஞ்சி: 100 கிராம்
கொத்தமல்லி மற்றும் புதினா: ஒரு கைப்பிடிவெங்காயம்: கால் கிலோ
பட்டை: 5 கிராம்
ஏலக்காய்: 2 கிராம்
கிராம்பு: 2 கிராம்
தக்காளி: 200 கிராம்
தயிர்: 2 கரண்டி
செய்முறை:
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா தக்காளி, தயிர் மற்றும் சிக்கன் துண்டுகள், மசாலா பொடிகள், உப்பு சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து, பிசைந்து வைத்தளள் சிக்கன் மசாலாவை அதில் சேர்த்து அடுப்பை பற்றவைக்கவும். குக்கர் ஒரு விசில் வந்தவுடன், அதை திறந்து அதில், அரை மணி நேரம் ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து தேவையான அளவு கொதிக்கும் தண்ணீர் சேர்க்கவும்.
இப்போது குக்கரை மூடி, குறைந்த தீயில் ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். குக்கரின் ஆவி அடங்கியதும், மெதுவாகத் திறந்து ஒரு நிமிடம் ஆறவிட்டு, பின்னர் அதை கலக்கி விடவும். பிரியாணி சூடான பிறகு பரிமாறுங்கள். இந்த பிரியாணியின் சுவை உங்களை நிச்சயம் வியக்க வைக்கும்.