/indian-express-tamil/media/media_files/2025/07/08/semiya-briyani-2025-07-08-17-44-44.jpg)
இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான ஒரு புதுமையான பிரியாணியை சமைத்து அசத்தலாம். அதிலும் அசைவ பிரியாணி போலவே சுவை தரும் இந்த சோயா புதினா பிரியாணி, ஆரோக்கியமானதும் கூட. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அரைக்க:
கிராம்பு - 5
பட்டை - 1
அன்னாசி பூ - 1
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 3
பச்சை மிளகாய் - 3
புதினா இலைகள் - 1/2 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
பிரியாணிக்கு:
பாஸ்மதி அரிசி - 2 கப்
சோயா - 1/2 கப்
வெங்காயம் - 3
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1 கப்
தயிர் - 3 டீஸ்பூன்
எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
முந்திரி - 10
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 3 கப்
செய்முறை:
முதலில், பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி, 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். அதேபோல, சோயாவை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, பின் நீரை பிழிந்து தனியாக எடுத்து வைக்கவும். அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரிஞ்சி இலை மற்றும் முந்திரியைச் சேர்த்து வறுக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். இப்போது, நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
அடுத்து, அரைத்து வைத்த புதினா கலவை, உருளைக்கிழங்கு, சோயா, குழம்பு மிளகாய் தூள், மற்றும் தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு கிளறவும். மூன்று கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் கொதித்ததும், ஊறவைத்த அரிசியை சேர்க்கவும்.
அரிசியும் தண்ணீரும் சமமாக வந்ததும், கடாயை மூடி, அதன் மேல் கனமான பொருளை வைத்து, சூடான தோசைக்கல்லின் மேல் வைக்கவும். இதை 30-35 நிமிடங்கள் மிதமான தீயில் 'தம்' போடவும். அடுப்பை அணைத்து, 10 நிமிடங்கள் கழித்து, மூடியைத் திறந்து, மெதுவாகக் கிளறி, சுவையான சோயா புதினா பிரியாணியை ராய்த்தாவுடன் பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.