வெங்கடேஷ் பட் ஸ்டைலில் சுட்ட மாங்காய், கார ரசம் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்
மாங்காய் – 2
பச்சை மிளகாய் – 5
Advertisment
Advertisements
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
சிகப்பு மிளகாய் – 5
சாம்பார் வெங்காயம் – 50 கிராம்
சீரகம் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
வெல்லம் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி
செய்முறை
முதலில் மாங்காய் மீது எண்ணெய் தடவி அதை நெருப்பில் சுடு்டு எடுக்க வேண்டும். எடுத்தவுடன், அந்த மாங்காயை தண்ணீரில் போட்டு, வைக்கவும்.
அடுத்து பச்சை மிளகாய்யை மாங்காய் போல் எண்ணெய் தேய்த்து அதையும் நெருப்பில் சுட்டு எடுக்கவும். தண்ணீரில் இருக்கும் மாங்காய் சூடு தணிந்தவுடன், அதன் மேல் தோலை நீக்கிவிடவும்.
அதன்பிறகு மாங்காயின் சதைப்பகுதியை துண்டு துண்டாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். இந்த மாங்காயுடன் சுட்ட பச்சை மிளகாயை சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பானில் நல்லெண்ணெய் சேர்த்து, அதில் காய்ந்த மிளகாய், கடுகு, கருவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். அதன்பிறகு சீரகம் இதில் சேர்க்கவும்.
அடுத்து, அரைத்து வைத்துள்ள மாங்காய் பச்சை மிளகாய் கலவையை அதனுடன் சேர்த்து, அதில் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைலிட்டர் தண்ணீர் சேர்க்கவும்.
இந்த கலவை கொத்தித்து வந்தவுடன், அடுப்பை ஆப் செய்துவிட்டு அதில் ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கினால் சுவையான சுட்ட மாங்காய் கார ரசம் ரெடி.