மாலையில் சாப்பிட இனிப்பு பணியாரம், இட்லி மாவு வைத்து செய்வது எப்படி என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை – அரை கப்
வெல்லம் – அரை கப்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் – ஒரு கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
இட்லி மாவு – ஒன்னறை கப்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
செய்முறை
முதலில் பொட்டுக்கடலையை மிக்சியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு பானில் வெள்ளத்தை சேர்த்து, பாகுபோல் நன்றாக கரைந்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து தனியாக ஒரு பானில், நெய் விட்டு துருவிய தேங்காய், சேர்ந்து நன்றாக கிளறவும். அதில் அரைத்து வைத்துனள்ள பொட்டுக்கடலையை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
நன்றாக கிளறியதும், அதில், வெல்ல பாகை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறி விடவும். அதன்பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எடுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு இட்லி மாவை எடுத்துக்கொண்டு அதில், அரிசி மாவு, சர்க்கரை, மற்றும் ஏலக்காய் பொடி சேர்ந்து நன்றாக கலக்கிவிடவும். அதன்பிறகு பணியார சட்டியில், நெய் அல்லது எண்ணெய் சேர்த்து, செய்து வைத்துள்ள உருண்டையை, மாவில் சேர்த்து பணியார சட்டியில் பொறுத்து எடுத்தால், சுவையான குழி பணியாரம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“