செஃப் தீனா ஸ்டைலில் சிம்பிளாக மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
Advertisment
Advertisements
வெந்தயம் – கால் டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 2
புளி ஒரு நெல்லிக்காய் அளவு
தனி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
மீன் – அரை கிலோ
கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு மண்பானையை அடுப்பில் வைத்து, அதில், நல்லெண்ணெய் சேர்க்கவும். அடுத்து அதில், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். அடுத்து, பூண்டு சேர்க்கவும்.
அதன்பிறகு சின்ன வெங்காயம், சேர்த்து வதக்கி, கறிவேப்பிலையை சேர்க்கவும். இந்த கலவை வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து, தனி மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு புளி கரைசலை இதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். அதன்பிறகு இந்த கலவையில் மீனை சேர்த்து, கொத்தமல்லி இலை சேர்த்து கொதிக்கவிடவும். 5 நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான மீன் குழம்பு தயார்.