எளிமையான முறையில் சுவையான கார போண்டா எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 1 கப் (250 கிராம்)
உளுத்தம் பருப்பு - 1/2 கப் (125 கிராம்)
தண்ணீர்
வெங்காயம் – 1
இஞ்சி
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
ஓமம் - 1/4 தேக்கரண்டி
அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை
எண்ணெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கடலை பருப்பு,அரை கப் உளுத்தம் பருப்பு எடுத்து நன்றாக கழுவி தேவையான தண்ணீர் ஊற்றி ரெண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு மிக்ஸ்ர் ஜாரில் ஊற வைத்த பருப்பு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். மாவுடன், பொடிதாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடிதாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி, நறுக்கிய மூன்று பச்சைமிளகாய், பொடிதாக நறுக்கிய கறிவேப்பிலை. கொஞ்சம் உப்பு. ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், கால் டீஸ்பூன் ஓமம், மூன்று டேபிள் ஸ்பூன் அரிசி மாவு , பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை, சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் பொறிக்க தேவையான எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், கொஞ்சமாக மாவை எடுத்து சிறு போண்டாகளாக எண்ணெயில் போடவும். எல்லா பக்கமும் நன்றாக சிவந்து பொரிந்தவுடன் எண்ணெயில் இருந்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். கார போண்டாவை தேங்காய் சட்னி உடன் சூடாக பரிமாறவும்.