இட்லி, தேசை, சாப்பாத்திக்கு விதவிதமாக சட்னி செய்வதை விட, இந்த ஒரு சைட்டிஷ் செய்தால் போதும், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
வரமிளகாய் – 7
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 5
கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
நறுக்கிய தேங்காய் – ஒரு கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு குக்கரில், ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, வரமிளகாய், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். இந்த கலவை வதக்கியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி வைத்து வேக வைக்கவும்.
அதன்பிறகு ஒரு கடாயில், ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, நறுக்கிய தேங்காய், சீரகம், நெல்லிக்காய் அளவு புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதன்பிறகு இந்த கலவையை மிக்சியில் வைத்து குரகுரப்பாக அரைத்துக்கொண்டு, அதில், வேக வைத்த தக்காளி, வரமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான சட்னி தயார்.
கடைசியில் இதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இல்லை மற்றும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“