உங்க குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் ஸ்பெஷலாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால், இந்த வெஜ் பிரியாணியை டிரை பண்ணுங்க. ரொம்ப ஸ்பெஷலாக உணருவார்கள்.
தேவையான பொருட்கள்:
நெய் - 50 கிராம்
வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
தக்காளி – 2
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு
புதினா
சோயா சங்க்ஸ்
மிளகாய் தூள்
மல்லித்தூள்
கரம் மசாலா
பிரியாணி மசாலா
தயிர்
பாசுமதி அரிசி
செய்முறை:
பாத்திரத்தில் 50 கிராம் அளவு நெய் சேர்த்துக்கொள்ளுங்கள். மூன்று வெங்காயம், மூன்று பச்சை மிளகாய், கூடவே ஹோல் ஸ்பைசஸ் எல்லாம் சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்கி, ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அதன் பச்சை வாசனை போனதுக்கு அப்புறமாக, இரண்டு பெரிய சைஸ் தக்காளியைச் சேர்த்துக்கொள்ளுங்கள். தக்காளி பாதி வதங்கி வந்ததுக்கு அப்புறமாக, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, ஒரு கைப்பிடி புதினா, கொத்தமல்லி, கூடவே ஒரு கைப்பிடி சோயா சங்க்ஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெயிலேயே வதக்குங்கள்.
ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு டேபிள்ஸ்பூன் அளவு மல்லித்தூள், ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலா, ஒரு டேபிள்ஸ்பூன் பிரியாணி மசாலா சேர்த்து, ஒரு கரண்டி கெட்டியான தயிரும் சேர்த்து, மிக்ஸ் பண்ணிடுங்க. இன்று நான் பாஸ்மதி ரைஸ் தான் பயன்படுத்தி இருக்கிறேன். அதனால் ஒரு கப் ரைஸுக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் கூட சேர்த்து மூடி போட்டு விடுங்கள். தண்ணீர் நன்கு கொதித்து வந்ததுக்கு அப்புறமாக, ஊற வைத்த பாஸ்மதி ரைஸையும் கூட சேர்த்து விடுங்கள். தேவையான அளவு உப்பையும் சேர்த்து, அரை லெமன் பிழிந்து விட்டு மூடி போட்டு விடுங்கள்.
தண்ணீரும் அரிசியும் சரிசமமாக வந்ததுக்கு அப்புறமாக, மூன்று டேபிள்ஸ்பூன் அளவு நெய் விட்டு விடுங்கள். இப்போது தம் போட்டு விடலாம். அடியில் தோசைக்கல்லை, மேலே பாத்திரத்தை தூக்கி வைத்து, லோ ஃபிளேமில் ஐந்து நிமிடம் விட்டு இறக்கினீர்கள் என்றால், சுவையான வெஜ் பிரியாணி ரெடியாகி இருக்கும். நீங்கள் இதே பிராசஸில் குக்கரில் செய்தீர்கள் என்றால், இரண்டு விசில் விட்டு இறக்கி விடுங்கள். அவ்வளவுதான், வெஜ் பிரியாணி ரெடி.