மரவள்ளி கிழங்கை வைத்து வெங்கடேஷ் பட் ஸ்டைலில், போண்டா மற்றும் சட்னி எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
மரவள்ளி கிழங்கு – 200 கிராம்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
Advertisment
Advertisements
காய்ந்த மிளகாய் – 4
உளுத்தம்பருப்பு – 1 டீஸபூன்
புதினா ஒரு கைப்பி
மல்லி இலை அரை கட்டு
உப்பு – தேவையான அளவு
புளி – 20 கிராம்
பச்சை மிளகாய் – 3
ராவா – 60 கிராம்
தயிர் – 400 கிராம்
எண்ணெய் பொறிக்க தேவையாள அளவு
தக்காளி 2
துருவிய தேங்காய் – ஒரு கப்
வெங்காயம் – 2
இஞ்சி – 2 துண்டு
முந்திரி பருப்பு – 10
பெருங்காயத்தூள் – சிறிதளவு
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சூடான பின், அதில் உளுத்தம் பருப்பை சேர்க்கவும். அடுத்து காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வணக்கவும்.
அடுத்து அதில், நறுக்கிய தக்காளி, புதினா, அரைக்கட்டு மல்லி, சேர்த்து வதக்கவும். நன்றாக வணங்கியவுடன், அடுப்பை ஆப் செய்துவிட்டு, அதில் துருவிய தேங்காய் சேர்த்து கடாய் சூட்டுடன் கிளறவும்.
இந்த கலவையை எடுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்தால் சுவையாக சட்னி தயாராகிவிடும்.
போண்டா செய்வதற்கு, முதலில் மரவள்ளி கிழங்கை நன்றாக கழுவி, தோலை நீக்கி சுத்தம் செய்து, வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து அதை நன்றாக மைத்து, அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பிசையவும்.
அடுத்து, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி இலை, பெருங்காயத்தூள், இஞ்சி, தேவையான அளவு உப்பு, சேர்த்து பிசையவும்.
அதன்பிறகு தயிர், ரவை, சேர்த்து நன்றாக பிசைந்து, 10 நிமிடங்கள், ஊறவிட்டு, அதன்பிறகு போண்டா போல் உருட்டி எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான மரவள்ளி கிழங்கு போண்டா ரெடி.