முதலில் சேப்பங்கிழங்கை நன்றாக வேகவைத்து அதன் தோலை உறித்து, வடைக்கு மாவு செய்வது போல் கையில் தட்டி, எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு, ஒரு பவுலில், உப்பு, சாட் மசாலா, சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், பிளாக் சால்ட், மாங்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பவுலில், துருவிய வெள்ளரிக்காயை தண்ணீர் இல்லாமல் பிழிந்து, தயிருடன் கலந்து உப்பு சேர்த்து, நறுக்கிய பூண்டு, கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு சேர்த்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பவுலில், நறுக்கிய வெங்காயத்தை நன்றாக தண்ணீரில் அலசிவிட்டு, எடுத்து, அந்த வெங்காயத்தில், எலுமிச்சை சாறு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, நறுக்கிய இஞ்சி, மாதுளை பழம், சாட் மசாலா சேர்த்து கலந்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு, வேக வைத்து வறுத்து எடுத்த சேப்பங்கிழங்கை தனியாக தனியாக ஒரு தட்டில் வைத்து, அதில் தயிர் வெள்ளரிக்காய் கலவையை சேர்த்து அதன்பிறகு, வெங்காயம், மாதுளை பழம் கலவையை சேர்த்து, இறுதியாக மிக்சர் சேர்த்து வைத்தால் சுவையாக சேப்பங்கிழங்கு சாட் தயார்.