நல்ல ஆரோக்கியமான தயிர் சாதம் செய்வது எப்படி என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
பச்சரிசி – ஒரு கப்
பால் – ஒரு கப்
பட்டர் – 50 கிராம்
தயிர் – 6 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
நறுக்கிய இஞ்சி – ஒன்னறை டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய்- ஒன்னறை டீஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த குண்டு மிளகாய் – 4
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுந்து - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கையளவு
கொத்தமல்லி இலை – ஒரு கையளவு
ப்ரஷ் கிரீம் – 2 டேபிள் ஸ்பூன் (தேவை இருந்தால் மட்டும்)
செய்முறை:
முதலில், ஒரு கப் அரிசியை, ஒரு கப் பால், 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 6 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
குக்கரில் இருந்து பிரஷ்னர் முடிந்தவுடன், அதனை திறந்து, அதில், துருவிய இஞ்சி, பட்டர் ஒரு ஸ்பூன், பெருங்காய தூள், நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவும்.
கிளறிய சாதத்தை தனியாக எடுத்து வைத்துவிட்டு, ஒரு பானை அடுப்பில் வைத்து எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
இடையில், சாதத்தில் ஒரு கைப்பிடி கொத்தமல்லி சேர்த்து அதற்கு மேலே தாளித்த இந்த தாளிப்பை சேர்த்து நன்றாக கிளரவும்.
இந்த கலவையில் 6 டீஸ்பூன் (70-75 கி) தயிர், 50 கிராம் பட்டர், சிறிதளவு பால், ப்ரஷ் கிரீம் சேர்த்து நன்றாக கிளறினால், சுவையான தயிர் சாதம் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “