மாவு ரொம்ப நேரம் ஊற வைக்க வேணாம்... எந்த கஷ்டமும் இல்லாமல் சாஃப்ட் சப்பாத்தி!
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் ஒன்று சப்பாத்தி. கோதுமை மாவில் செய்யப்படும் இந்த உணவு ஏராமான நன்மைகள் இருப்பதாகவும், சர்க்கரை நோயாளிகளுக்கு சப்பாத்தி மிக சிறந்த உணவு என்றும் கூறப்படுகிறது.
சாப்பாத்தி மாவை பிசையும்போது இந்த சிம்பிள் டிப்ஸை மட்டும் சரியாக செய்தால் சப்பாத்தி மிகவும் ஃசாப்ட்டாக வரும் என்பது உங்களுக்கு தெரியமா? தெரியவில்லை என்றால் இங்கு பார்ப்போமே!
Advertisment
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் ஒன்று சப்பாத்தி. கோதுமை மாவில் செய்யப்படும் இந்த உணவு ஏராமான நன்மைகள் இருப்பதாகவும், சர்க்கரை நோயாளிகளுக்கு சப்பாத்தி மிக சிறந்த உணவு என்றும் கூறப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில், தமிழகத்தில் கூட பலரும் சப்பாத்தியை உணவாக எடுத்துக்கொள்ளும் வழக்கம் அதிகரித்துள்ளது,
இந்த சப்பாத்தியை செய்யும்போது, மிருதுவாக செய்ய வேண்டும். அப்படி இருந்தால் தான் சாப்பிட சிறப்பாக இருக்கும். அதே சமயம், ரஃப்பாக இருந்தால் சாப்பிடுவது கடினமாக இருக்கும். இதனால் பலரும் சப்பாத்தியை மிருதுவாக செய்ய பல வழிகளில் முயற்சி செய்வார்கள். ஆனால், எல்லோருக்கும் மிருதுவாக சப்பாத்தி வருமா என்றால் சந்தேகம் தான். ஆனால் இந்த முறையில் சப்பாத்தி செய்தால், மிருதுவாக வரும்.
ஒரு பாத்திரத்தில், 3 கப் கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். அடுத்து 3 கப் மாவுக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும். மாவை பிசையும்போது முதலில் கையால் பிசையாமல், ஃபோர்க் கரண்டியை பயன்படுத்தி கிளறிவிடவும். அதன்பிறகு கையை தண்ணீரில் நனைத்துக்கொண்டு மாவை பிசையவும். மாவை நன்றாக பிசைந்தவுடன், கையில் இருக்கும் சூடு மாவில் படும் வகையில், நன்றாக அழுத்தி பிசைந்துவிடவும்.
Advertisment
Advertisements
அதன்பிறகு மாவை ரோல் செய்துவிட்டு, உருண்டை பிடிக்கும் அளவுக்கு மாவை தனித்தனியாக பிரிந்து எடுத்துக்கொள்வும். அடுத்து ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து கைககளில் இருக்கும் சூடு படும்படி மாவை உருண்டை பிடித்து எடுத்துக்கொள்ளவும். கையில் இருக்கும் சூடு பட பட மாவு சாப்ட் ஆகும். சப்பாத்தியும் மிருதுவாக வரும். அடுத்து உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து சப்பாத்தி கல்லில் உருட்டி தோசை கல்லில் போட்டு எடுத்தால் சாப்ட் சப்பாத்தி ரெடி. ட்ரை பண்ணி பாருங்க.