ஆபீஸ் மற்றும் கல்லூரிக்கு செல்லும் பேச்சிலர்களுக்கு தனியாக சமைத்து சாப்பிடுகிறார்கள் என்றால் அவர்களுக்காக ஈஸியான தக்காளி ஊறுகாய் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி பெரியது – 5
புளி நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
பூண்டு – 20 பல்
கடுகு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
சீரகம் – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கவும். இந்த தக்காளி வெந்து தண்ணீர் அளவுக்கு வந்தவுடன், அதில் புளி கரைசலை சேர்க்கவும். அடுத்து மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
அடுத்து ஒரு வாணலில், பூண்டை வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அனுடன் வறுத்த பூண்டையும் சேர்க்கவும். இந்த கலவையை, தக்காளி கலவையுடன் சேர்த்து வதக்கி இறக்கினால் சுவையான தக்காளி ஊறுகாய் தயார். நீங்களும் வீ்ட்டில் ட்ரை பண்ணி பாருங்க.