தினசரி உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். இரும்புச்சத்து உட்பட உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொடுக்கும் கீரைகளை, உணவில் சேர்த்துக்கொள்ள தவறிவிட கூடாது. ஒவ்வொரு கீரையும் நமக்கு பல வழிகளில் உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. பெரும்பாலும் கீரைகள் நமக்கு சாதாரணமாக கடைகளில் கிடைக்கும். அப்படி இல்லை என்றால் நாம் வீட்டிலேயே வளர்க்கவும் செய்யலாம்.
Advertisment
கீரைகளை கடைந்து, பொறியல் செய்து சாப்பிடுவது போன்று பருப்பு சேர்த்து கூட்டாகவும் செய்து செய்து சாப்பிடலாம். அந்த வகையில் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் கீரைக்கூட்டு எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அரைக்கீரை – ஒரு கப்
Advertisment
Advertisements
கடலைப்பலருப்பு – 50 கி
துவரம்பருப்பு – 50 கி
பாசி பருப்பு – 50 கி
பச்சை மிளகாய் – 3
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
தக்காளி – 1
வெங்காயம் – 1
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
சிகப்பு மிளகாய் – 4
பூண்டு – ஒரு கைப்பிடி
பெருங்காயப்பொடி- ஒரு டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
முதலில், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு மற்றும் பாசி பருப்பை ஒன்றாக கழுவி சுத்தம் செய்து நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய், கடுகு, பூண்டு, சின்ன வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளிக்கவும்.
அதன்பிறகு, நறுக்கிய தக்காளி, வெங்காயம், சேர்த்து அதனுடன் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து வணக்கவும். இந்த கலவையில், தேவையான அளவு உப்பு சேர்த்துவிட்டு, அடுத்து கீரையை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
கீரை நன்றாக வெந்தவுடன், அதில், வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து கிளறவும். பருப்பு கீரை மிக்ஸ் ஆவதற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றி வதக்கவும். 3-4 நிமிடங்கள் கழித்து இதில் பெருங்காய பொடியை சேர்த்து கிளறி விட்டு, அடுப்பை ஆப் செய்துவிட்டு, கீரையில் நெய் சேர்த்து இறக்கினால் சுவையான கீரைக்கூட்டு ரெடி.