மழைக்காலம் வந்தாலே சூடாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று பலருக்கும் தோன்றும். அப்படி நினைப்பவர்களுக்கு எளிமையாக செய்யக்கூடிய சூப்பரான மசாலா கார்ன் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
கார்ன் – 4
தங்காளி – 2
வெங்காயம் – 2
மல்லி – சிறிதளவு
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
மிளகு தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை – அரை பழ சாறு
வெண்ணெய் – சிறிதளவு
செய்முறை:
முதலில் கார்ன்களை துண்டு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இது ஆறியதும் கார்ன்களை தனியாக உதிர்த்து எடுத்துக்கொள்ளவும்.
அதில், நறுக்கிய தக்காளி, வெங்காயம், மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சை பழச்சாறு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி எடுத்தால், சுவையான மசாலா கார்ன் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“