இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை உடல் எடை அதிகரிப்பு. இதற்கு முக்கிய காரணம் உணவு முறையில் மாற்றம் செய்வது, உடல் பயிற்சி இல்லாததது போன்ற காரணங்களை சொல்லலாம். இப்படி உடல் எடை அதிகமாக இருந்தால் அவர்களுக்கு நோய் தாக்கமும் அதிகமாக இருக்கும். இதனால் பலரும் உடல் எடையை குறைக்க பலவகையான மருத்துவ முறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
Advertisment
அந்த வகையில் உடல் எடையை குறைக்க 4 வகையான வழிகளைடாக்டர் சிவக்குமார் கூறியுள்ளார். உடல் எடையை குறைக்க ஆலோசனை கேட்டாலட பலரும் பலவிதமாக வழிகளை சொல்வார்கள். ஆனால் அவற்றை விட சிறந்த எளிமையான 4 வழிகளை பார்ப்போம்.
புரோட்டின் மிகுந்த உணவு
உடலுக்கு தேவையான புரோட்டின் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். புரோட்டின் அதிகம் இருந்தால், சாப்பிட்ட உடனே பசி அதிகம் இருக்காது.
Advertisment
Advertisements
இரவு உணவாக சாலட்
இரவு உணவாக காய்கறிகள் அதிகம் நிறைந்த சாலட்களை எடுத்துக்கொண்டால், ஃபைபர் அதிகம் இருப்பதால் அதில் இருந்து அதிக கலோரிகள் கிடைக்காது. உடலில் சர்க்கரையின் அளவையும் கட்டப்படுத்தும்.
ஜூஸ்களை தவிர்க்க வேண்டும்
ப்ரஷ் ஜூஸ் அல்லது பேக்ட் ஜூஸ் என எதுவாக இருந்தாலும் அதனை தவிர்ப்பது நல்லது. வழத்தை ஜூஸாக எடுப்பதற்கு பதிலாக பழத்தை பழமாக எடுத்துக்கொள்வது தான் நல்லது.
ரிப்பைன் அன் ப்ராசஸ்டு உணவுகள்
பீட்சா, பர்கர், ப்ரஞ்ச் ப்ரைஸ் வரை, சாஸ் உள்ளிட்ட பொருட்களில் சர்க்கரை அதிகமாக உள்ளது. அதனால் உடல் எடை குறைக்கும்போது இது மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது. பசிக்காக உணவை சுவையாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சுவைக்காக உணவு எடுத்துக்கொண்டால் அது ஆரோக்கியத்திற்கு சுமை என்று டாக்டர் சிவக்குமார் கூறியுள்ளார்.