உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை கொடுப்பதில் கீரைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. ஒவ்வொரு கீரையும் ஏதாவது ஒரு வகையில் நமது உடலுக்கு பலன் தரும் கீரைகள் தான். இதனால் தான் தினமும் உணவில் கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக, கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கீரை முக்கிய தேவையாக இருக்கிறது.
அந்த வகையில் அரைக்கீரை சாப்பிடுவது உடலுக்கு இரும்புச்சத்து கொடுப்பதோடு மட்டுமல்லால், ஆண்களுக்கு முக்கிய நன்மைகளை கொடுக்கிறது. அரைக்கிரையை பொறியல் செய்து உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலி நீங்கும். வாயு தொல்லையில் இருந்து விடுபட அரைக்கீரை முக்கிய உணவாக இருக்கிறது, இந்த கீரையுடன் பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து சாப்பிட்டு வந்தால், சளி, இருமல் தொல்லை நீங்கும்.
அரைக்கீரையோடு சீரகத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால், நன்றாக பசி எடுக்கும். பிரசவித்த பெண்கள், கீரையை வதக்கியோ அல்லது கடைந்தோ சாப்பிட்டு வரும்போது, குழந்தைகளுக்கு தேவையான பால் கிடைக்கும். பிரசவித்த பின் ஏற்படும் உடல் சோர்வு நீங்கும். ஆண்மை குறைவால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு, ஆண்மையை மீட்டெடுக்கும் மருந்தாக இந்த அரைக்கீரை பயன்படுகிறது. கண்களுக்கு குளிர்ச்சி தரும் தன்மையும் அரைக்கீரைக்கு உண்டு.
இந்த அரைக்கீரையை, வேகவைத்து, தக்காளி, பூண்டு, புளி, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், வெங்காயம், ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து அதை ஒன்றாக கடைந்து சாப்பிட்டு வந்தால் அதிக நன்மைகள் கிடைக்கும். இந்த முறையில் செய்து சாப்பிட்டு பாருங்கள்.