இன்றைய காலக்கட்டத்தில் பலரும் அதிகம் பயன்படுத்தும் தானிய வகைகளில் ஒன்று மக்காச்சோளம். இது வீரிய ஒட்டு ரக சோளம் தான். இது எந்த வகையிலும் அதிக பயன் தராது. சுவையானது தான் ஒரு சத்துக்களை உள்ளடக்கியது தான்என்றாலும் கூட, இதில் அதிக மருதுவ பயன்கள் இல்லை என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
Advertisment
பல ஆண்டுகளாக நம்முடன் இருந்து வந்த சோளம் வெண்சோளம். இதனை சிறு சோளம் என்று கூட சொல்வார்கள். நமது முன்னோர்கள் காலக்கட்டத்தில் இந்த சிறு சோளம், தினசரி உணவுக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைக்கு மக்காச்சோளத்தின் பயன்பாடு அதிகரித்துவிட்டதால், சிறுசோளம் முழுசாக மறைந்துபோய்விட்டது. அதே சமயம், இந்த சிறுசோளம்,இன்றைக்கு கிராமங்களில் மாட்டு தீவனமாக பயன்படுகிறது.
இந்த வெண்சோளம் நமது உடலுக்கு குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்றைக்கு சிறுவயதில் குழந்தைகளுக்கு சளி பிடிப்பது அதிகம் இருந்து வருகிறது, இருமல் தும்மல், மற்றும் உடலுக்கு ஒப்புக்கொள்ளாத உணவுகளை சாப்பிட்டதால் வந்த பிரச்னைகள், இவை அனைத்திற்கும் புரத உணவு குறைபாடு தான் காரணம். ஆனால் இந்த வெண் சோளத்தில் புரதம் அதிகமாக நிறைந்துள்ளது.
வயதுக்கு ஏற்ற உடல் அமைப்பு இல்லாத குழந்தைகள், அடிக்கடி சளி மற்றும் இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தண்ணீரை மாற்றி குடித்தாலே நோய் தொற்றுக்கு ஆளாவது என நோய் எதிர்ப்பு ஆற்றல்குறைவால் சந்திக்கும் பிரச்னைகளுக்கு புரதச்சத்து மிகவும் அவசியமான ஒன்று. இந்த சோளம் அதிக புரதச்சத்து நன்மைகளை கொடுக்கிறது. புரதம் சாப்பட்டாலும் அது முழுமையாக நமது உடலில் கொடுக்கும் சில தானிங்களில் சோளமும் ஒன்று.
Advertisment
Advertisements
இந்த சோளத்தை மாவாக அரைத்து வைத்துக்கொண்டு ஏதாவது ஒரு வகையில் உணவாக உட்கொள்ளலாம். இந்த மாவுடன் உளுந்து மாவு சேர்த்து தோசை சுட்டு சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு வாரத்தில் இருமுறை, சோளத்தில் செய்த தோசை மற்றும் இட்லியை உணவாக கொடுத்தால் அவர்களுக்கு புரதச்சத்து அதிகாரிக்கும். சோளமாவு, அரசி மாவு மற்றும் உளுத்துமாவு சேர்த்து புளிக்க வைத்து பணியாரமாக சுட்டு கொடுக்கலாம் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.