பொதுவாக உடல் ஆரோக்கியமான சத்தான உணவுகள் மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து நிறைந்த முக்கிய உணவுகளையும் சேர்த்துக்கொள்வது அவசியம். அதிலும் 40 வயதை கடந்தவர்கள் தங்களது உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உணவு மட்டுமல்லாமல் இயற்கையில் கிடைக்கும் ஊட்டச்சத்து நிறைந்த முக்கிய பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வது கட்டாயம்.
இந்த வகையில் வெந்தயம் இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் முக்கிய பயன்தரும் ஊட்டச்சத்து நிறைந்த பொருளாக உள்ளது. ஆரம்ப நிலை ரத்த கொழுப்பு கூடி இருப்பவர்களுக்கு வெந்தயம் மிகச்சிறந்த உணவாக உள்ளது. இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் கரையும் நார்ச்சத்து மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ள ஒரு பொருள் வெந்தயம் தான்.
கரையாத நார்ச்சத்து, நாம் அதிகமான சாப்பாடு சாப்பிடும்போது உணவை செறிக்க வைத்து கழிவுகளை வெளியேற்ற முக்கியமாக பயன்படுகிறது. கரையக்கூடிய நார்ச்சத்து ரத்த கொழுப்புகளை குறைக்கும் தன்மை கொண்டனது. இதனால் தினமும் 5-10 கிராம் வரை வெந்தயம் சாப்பிடுவது உடலுக்கு பெரிய நன்மை அளிப்பதாக இருக்கும். சைவ உணவுகளில் அதிக ஃபைபர் இருப்பது வெந்தயம் மட்டுமே.
வேறு எந்த தாவர பொருட்கள் குறிப்பாக கீரைகளில் இருப்பதை விட வெந்தயத்தில் அதிகமான நார்ச்சத்து உள்ளது. இதனால் 40 வயதுக்கு மேல் இருப்பவர்கள் தினமும் தங்களது உணவில் வெந்தயத்தை சேர்த்துக்கொள்வது நல்லது. அதே சமயம் ஆஸ்துமா, மூக்கடைப்பு மற்றும் சளித்தொல்லை இருப்பவர்கள் வெந்தயத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம். மற்றவர்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
அடுத்து நமது தினசரி உணவில் இரண்டு பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஒன்று சின்ன வெங்காயம். இரண்டு பூண்டு. இதில் வெங்காயத்தை தினமும் 10-வது பச்சையாக சாப்பிட வேண்டும். வேகவைத்தால் அதன் சத்து பாதியாக குறைந்துவிடும். தயிர் பச்சடி மாதிரி செய்து வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம். ஆனால் பூண்டை வேக வைத்துதான் சாப்பிட வேண்டும்.
10 பல் பூண்டு நன்றாக வேகவைத்து சாப்பிடலாம். அதேபோல் குழம்பு காய் உள்ளிட்ட உணவு பொருட்களில் சேர்த்து சாப்பிடலாம். பூண்டு வெங்காயம் வெந்தயம் இவை மூன்றும் இல்லாமல் தனது தினசரி உணவு அமைய கூடாது என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். இந்த வீடியோ ஹெல்தி தமிழ்நாடு என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil