/indian-express-tamil/media/media_files/2025/03/09/9FYxK7V6uQJ9OTXJPLq9.jpg)
இன்றைய காலக்கட்டததில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை சர்க்கரை வியாதி. இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் கட்டப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம். மேலும் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என்பதை தெளிவாக தெரிந்துகொள்வது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் சிறந்த உணவு என்று சொல்வார்கள்.
அந்த வகையில் வேப்பமரத்தில் இருந்து கிடைக்கும் வேப்பம்பூவும் சர்க்கரை நோய்க்கு தீர்வு தரக்கூடிய ஒரு மருந்தாக இருக்கிறது என்று, ஆயுர்வேதிக் மருத்துவர் மைதிலி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், வேப்பம்பூவில் இயற்கையாகவே மதின உடல் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் தன்மை அதிகம் உள்ளது. இதை அடிக்கடி எடுத்துக்கொள்ளும்போது நீரிழிவு நோய் பாதிப்பை கட்டுகப்படுத்தும்.
டைப் 2 சர்க்கரை வியாதி இருக்கிறது என்றால், இந்த வேப்பம்பூவில் துவையல், அல்லது வேப்பம்பூ ரசம் வைத்து வாரத்திற்கு 2-3 முறை எடுத்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் நீரிழிவு நோயால் பாதிக்க்கபட்டவுடன் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளான, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகப்படியான தண்ணீர் தாகம் உள்ளிட்ட பிரச்னைகளை கட்டுப்படுத்தும். உடலில் சர்க்கரையின் அளவு 200-ஐ கடந்தாலும், இந்த வேப்பம்பூ அதனை கட்டுப்படுத்தும்.
வேப்பம்பூவை பறித்து காயவைத்து, மஞ்சள் நிறமாக மாறியவுடன், தண்ணீர் எதுவும் சேர்க்காமல், மிக்ஸியில் அரைத்து பொடி செய்து, வீட்டில் கண்ணாடி கண்டெய்னரில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். காலையில் எழுந்தவுடன், ஒரு க்ளாஸ் வெந்நீரியில் ஒரு டீஸ்பூன் அளவு வேப்பம்பூ பொடியை கலந்து குடிக்கலாம். அப்படி இல்லை என்றால் காலை 11 மணிக்கு மேல் டீ காபி குடிக்கும் நேரத்திலும் இதனை குடிக்கலாம். இந்த முறையில் 60 நாட்கள் குடித்து வந்தால், ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us