சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் உணவில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக இருந்து வரும் நிலையில், இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரையின் அளவு அதிகமாகா உணவை காலையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் அவர்கள் என்ன உணவு எடுத்துக்கொள்ளலாம் என்று டாக்டர் சிவபிரகாஷ் விளக்கியுள்ளார்.
Advertisment
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை நீரிழிவு நோய். உடல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதேபோல் சர்க்கரையின் அளவு குறைந்தாலோ, அல்லது அதிகரித்தாலே இரண்டுமே நீரிழிவு நோய் தான்.
இந்த நோயில் இருந்து விடுபடுவதற்கு, பல மருத்துவமுறைகள், சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டியது அவசியம். உடல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், இனிப்பு சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. குறிப்பாக, சப்போட்டா மற்றும் மாம்பழம சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நெல்லிக்காய், பப்பாளி உள்ளிட்ட பழங்களை சாப்பிடலாம்.
அதேபோல் கிழங்கு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கிழங்குகள் சாப்பிட வேண்டும் என்றால், பனங்கிழங்கு மற்றும் முடவாட்டுக்கால் கிழங்கை சாப்பிடலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காலை உணவு பற்றி டாக்டர் சிவபிரகாஷ் விளக்கியுள்ளார்.
Advertisment
Advertisements
பொதுவாக காலை உணவு உடலில் சர்க்கரையின் அளவை அதிகமாக்காத உணவாக இருக்க வேண்டும். அந்த வகையில் கோதுமை குருணையில் செய்யும் உணவு வகைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக நன்மை தரும். கோதுமை குருணையில் உப்புமா, பொங்கல், ஃப்ரைடு ரைஸ் உள்ளிட்ட பல உணவுகளை தயார் செய்யலாம். கோதுமை குருணை உடலின் சர்ககரை அளவை அதிகரிக்காது. வயிறு சாப்பிட்டது போன்ற உணர்வை கொடுக்கும். அதிகமாக சாப்பிட்ட உணர்வு இருக்காது. வாரத்தில் 2-3 நாட்கள் இந்த கோதுமை குருணையில் செய்த உணவுகளை சாப்பிடலாம் என்று டாக்டர் சிவபிரகாஷ் கூறியுள்ளார்.