உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றுவது சத்தான உணவுகள் மற்றும் பருப்ப வகைகள். இதில் முக்கியமானது முந்திரி பருப்பு. ஆனால் “முந்திரி எப்போதும் உடலுக்கு கெடுதல் என்ற கெட்ட பெயரைப் பெற்றுள்ளது” என்று தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்துள்ள ஊட்டச்சத்து நிபுணர் பக்தி கபூர், முந்திரி மிகவும் சத்தான பருப்பு “உங்கள் ஆரோக்கியத்தைப் மேம்படுத்தும் நம்பிக்கைக்கு தகுதியானது என்று கூறியுள்ளார்.
சிற்றுண்டியாகவும், சாஸ் வகைகளாகவும்,பயன்படும் முந்திரியில் “புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என பல்வேறு குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. முந்திரியில் உள்ள கொழுப்பின் பெரும்பகுதி ஸ்டீரிக் அமிலங்களிலிருந்து வருகிறது, இது இரத்தக் கொழுப்பில் நடுநிலை தாக்கத்தை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய அளவு முந்திரியை சாப்பிடுபவர்களுக்கு எல்.டி.எல் ‘கெட்ட’ கொழுப்பு குறைவதாக ஆராய்ச்சி கூறுகிறது, ஆனால் இந்த கட்டுரை குறித்து விளக்கம் அளித்துள்ள ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் முந்திரி பெண்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தினார்.
“இந்த பருப்புகளில் ஒரு சேவை மட்டுமே உங்கள் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கத்துடன் போராடுகிறீர்கள் என்றால், தினசரி அடிப்படையில் உங்கள் உணவில் முந்திரி பருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஹார்மோன் அளவை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் முந்திரியின் பண்புகளை அவர் எடுத்துரைத்தார்.
முந்திரியில் அனாகார்டிக் அமிலம் என்ற இயற்கையான ஈஸ்ட்ரோஜன் எதிர்ப்பு விளைவைக் கொண்டுள்ளது. ஒரு கைப்பிடி முந்திரியில் தோராயமாக 20 மில்லிகிராம் அனாகார்டிக் அமிலம் உள்ளது. பெண்கள் அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுகளால் பாதிக்கப்படுவதாக ஆய்வு கூறுகிறது. இதற்குப் பின்னால் உள்ள சாத்தியமான காரணங்களை வெளிப்படுத்திய கபூர், “அதிக ஈஸ்ட்ரோஜன் பெண்களிடையே மிகவும் பொதுவான நிலையாகும், ஏனெனில் நமது உணவு மற்றும் சுற்றுச்சூழலில் ஈஸ்ட்ரோஜனைப் போல செயல்படும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் செயற்கை இரசாயனங்கள் நிறைந்துள்ளன.
அதிக ஈஸ்ட்ரோஜன், கடுமையான அல்லது வலிமிகுந்த மாதவிடாய் இரத்தப்போக்கு, கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மற்றும் மார்பக புற்றுநோயின் அதிக ஆபத்து போன்ற பிரச்சனைகளை ஊக்குவிக்கும். “எனவே, உங்கள் ஹார்மோன் ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்த முந்திரி உதவும் இந்த ஊட்டச்சத்து நிறைந்த முந்திரி பருப்பை தினமும் உணவில் 1/4 வது கப் சேர்க்க மறக்காதீர்கள்,” என்று அவர் முடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“