உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை மூலிகைகள் தரும நன்மைகள் போன்று விதைகள் மற்றும் பருப்புகளும் ஊட்டச்சத்துக்களை தருகிறது. ஆரோக்கியமான விதைகள் மற்றும் பாதாம், அக்ரூட் பருப்புகள் அல்லது பிரேசில் பருப்புகள் நன்மை தரும் என்று நினைக்கும் மக்கள் மந்திரியை மறந்துவிடுகிறார். ஏனென்றால், முந்திரியில் அதிக நிறைவுற்ற கொழுப்பு உள்ளடக்கம் காரணமாக எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
அதே சமயம் முந்திரி அல்லது கஜூ அவ்வளவு ஆரோக்கியமற்றவை அல்ல. பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, பாலிஃபீனால், புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் காரணமாக அவை அனைத்து விதைகளை போலவே ஆரோக்கியமான ஒன்றாக உள்ளது.
கொழுப்புச் சத்து இருந்தாலும் முந்திரி எப்படி ஆரோக்கியமானது?
முந்திரியில் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன, அவை பெரும்பாலும் இதய நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் அபாயத்துடன் தொடர்புடையவை. இருப்பினும், முந்திரியில் உள்ள பெரும்பாலான கொழுப்புகள் இரத்தக் கொழுப்பில் நடுநிலையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஸ்டீரிக் அமிலங்களிலிருந்து வருகின்றன. இது குறித்து நடந்த ஆராய்ச்சியின்படி, ஒரு நாளில் ஒரு சிறிய அளவு முந்திரி சாப்பிடுவது குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதங்களின் (எல்டிஎல்) பகுதியளவு குறைப்புக்கு உதவும்.
முந்திரி குறிப்பாக, ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் அவற்றின் தாக்கம் காரணமாக நன்மை பயக்கும் ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கம் உள்ள பெண்களுக்கு, முந்திரி ஆரோக்கியமான ஹார்மோன் அளவை பராமரிக்க உதவும். இதில் அனாகார்டிக் அமிலத்தில் நிறைந்துள்ளதால், உடலில் இயற்கையான ஈஸ்ட்ரோஜன் எதிர்ப்பு விளைவை ஏற்படுத்தும்.
இயற்கைக்கு மாறான அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கருப்பை நார்த் திசுக்கட்டிகள், பிஎம்எஸ், வலிமிகுந்த மாதவிடாய் காலங்கள் மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படலாம். உடலில் ஈஸ்ட்ரோஜனைப் போல செயல்படும் செயற்கை இரசாயனங்கள் வெளிப்படுவதன் மூலம் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் தூண்டப்படலாம்.
ஒரு நாளைக்கு எத்தனை முந்திரி சாப்பிடலாம்?
ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி முந்திரி - தோராயமாக 20 கிராம் சாப்பிடுவதன் மூலம் அனாகார்டிக் அமிலத்தின் நன்மைகளைப் பெறலாம். இன்னும் துல்லியமாக, புரதங்கள், கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களைப் பெறுவதற்கு நான்கில் ஒரு கப் முந்திரி போதுமானதாக இருக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.