Tamil Lifestyle Update : இந்திய சமையல் அறையில் முக்கிய மசாலா பொருளாக இருப்பது கொத்தமல்லி. உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதிலும் கொத்தமல்லி இன்றியமையாத பயனை தருகிறது.
மருத்துவ குணங்கள் நிறைந்திருந்தாலும், கொத்தமல்லி இல்லைகளை பறித்து அதை சமையலுக்கு பயன்படுத்துவது என்பது பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் பலரும் கொத்தமல்லியை அதிகமாக பயன்படுத்த யோசிப்பதில்லை. ஆனால் கொத்தமல்லி இலைகளை அதன் தண்டில் இருந்து பறிப்பதற்கு எளிமையாக வழி உள்ளது.
இந்த முறையில் கொத்தமல்லியை பறிக்கும்போது நேரம் மிச்சமாகும். ஒரு பிளாஸ்டிக் கூடையை எடுத்து அதன் துளை வழியாக கொத்தமல்லியின் அடித்தண்டை விட்டு வெளியே இழுக்கும்போது தண்டு மட்டும் வெளியில் வரும் இலைகள் தண்டில் இருந்து பிரிந்து பிளாஸ்டிக் கூடையில் விழுந்துவிடும். இப்படி செய்து ஈஸியாக கொத்தமல்லியை தண்டில் இருந்து பிரித்தெடுக்கலாம்.
ஒரு கடினமான வேலையை ஒரு சோம்பேறியிடம் கொடுங்கள் அப்போதூன் அந்த வேலையை எப்படி எளிதாக செய்வது என்பது தொடர்பான வழி கிடைக்கும். அந்த வகையில் புதினா மற்றும் பிற மூலிகைகளை இந்த வழியில் தண்டில் இருந்து பிரித்தெடுக்கலாம்.
இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது வரை இந்த வீடியோவை 147 மில்லியன் பார்வைகளையும் 4.5 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“