Advertisment

ரெகுலரா கொஞ்சம் நெய்... உங்களுக்கு சுகர் இருந்தா இப்படி முயற்சி பண்ணுங்க!

உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அதிகரிப்பதைத் தவிர்க்க உதவும் உணவு மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

author-image
WebDesk
New Update
ரெகுலரா கொஞ்சம் நெய்... உங்களுக்கு சுகர் இருந்தா இப்படி முயற்சி பண்ணுங்க!

Diabetes

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உணவில் கட்டுப்பாடுகளை கொண்டு வரவேண்டியது அவசியம். அதேபோல் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் மற்றும் ஆரோக்கியமான மாறு உணவு பொருட்களை உங்கள் உணவு பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மருந்துகளை விட உங்கள் உணவு மற்றும் சரியான வாழ்க்கை முறை உங்கள் உடல் ஆரோக்கிய நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

Advertisment

உங்கள் இரத்த குளுக்கோஸ் அல்லது இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது நீரிழிவு ஏற்படுகிறது. எனவே, உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அதிகரிப்பதைத் தவிர்க்க உதவும் உணவு மாற்றங்களைச் செய்ய வேண்டும். நீரிழிவு நிர்வாகத்தில் சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள, ஊட்டச்சத்து நிபுணர் என்மாமி அகர்வால் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

"நீரிழிவு மேலாண்மை: உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உணவு எப்படி உதவும்?

அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், ஆறாத காயம் இவை அனைத்தும் உயர் இரத்த சர்க்கரையின் அறிகுறிகளாகும். நீங்கள் எல்லா மருந்துகளையும் முயற்சித்த பிறகும் உங்கள் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது என்றால் இது போன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் எப்போதாவது சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறை மேலாண்மையை பராமரிக்க வேண்டியது அவசியம்.

“உங்கள் உடலுக்கு சர்க்கரை சேர்த்தால் மட்டுமே சர்க்கரை நோய் ஏற்படாது. உண்மையில், பருப்பு, ரொட்டி, சப்ஜி உட்பட நீங்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவுப் பொருட்களிலிருந்தும் உங்கள் உடல் சர்க்கரையை அதிகரிக்கும். நீங்கள் அறிவியலைப் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் குளுக்கோஸ் ஸ்பைக்கை எப்போது, ​​எப்படி தவிர்க்க வேண்டும் என்பதைக் கண்டறிய வேண்டும் எனவே, சர்க்கரையை கட்டுக்குள் வைக்க மருந்து மட்டும் போதாது என்பது தெளிவாகிறது!

ஒரு நிபுணரைக் கலந்தாலோசித்து, உணவு மற்றும் வாழ்க்கை முறை ஆலோசனையைப் பெறுவது உதவியாக இருக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர் கூறியுள்ளார். நீங்கள் உங்கள் உணவில் கவனம் செலுத்த ஆரம்பித்ததும், தேவையான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்தவுடன் உங்களுள் ஏற்படும் மாற்றத்தை மிக வேகமாகக் காண்பீர்கள்.

நமாமி அகர்வால் (Nmami Agarwal) அடிக்கடி சமூகவலைளத்தில் உடல்நலம் மற்றும் உணவு தொடர்பான குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறார். குளிர்காலத்தில் உங்கள் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய ஐந்து உணவுப் பொருட்களை அவர் பட்டியலிட்டுள்ளார். அதில் பாரம்பரிய பஞ்சாபி உணவில் இரும்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்திருப்பதால் நீங்கள் பின்னியை ருசிக்க வேண்டும். மேலும், இது உங்கள் உடலை சூடாக வைத்திருக்கும்.

எள்ளுடன் தயாரிக்கப்பட்ட கஜக்கை நீங்கள் சுவைக்க வேண்டும். கஜாக்கில் கால்சியம் மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வீட்டிலேயே குளிர்கால உணவுகளை தயாரிக்க நீங்கள் பயன்படுத்த வேண்டிய மற்றொரு சூப்பர்ஃபுட் நெய். மேலும், உங்கள் உணவில் சிறிது நெய்யை தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள். பருவகால காய்கறிகளையும் சாப்பிடுங்கள், அவை ஆரோக்கியமாக இருக்க உதவும். கவனத்துடன் தேர்வு செய்து, ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Diabetes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment