இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் பாதிக்கும் முக்கிய நோய்களில் ஒன்று நீரிழிவு நோய். ரத்தத்தில் சர்க்கரையின் சமநிலை தவறும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. உணவில் இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் உணவகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.
நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், நீரிழிவு நோயின் சிக்கல்களைக் கட்டுப்படுத்த இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு உங்கள் உடலுக்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும். ஆனால் உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை திறம்பட கட்டுப்படுத்த முடிவும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பல உணவுகள் உள்ளன. அந்த வகையில் பாகற்காய் நீரிழிவு நோய்க்கு முக்கிய உணவாக பயன்படுகிறது. இது குறித்து டாக்டர் சிவராமன் ஹெல்தி தமிழ்நாடு என்ற யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் 6 சுவைகளும் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் நாம் அவ்வாறு எடுத்துக்கொள்வதில்லை. முக்கியமாக எல்லோரும் பெரும்பாலும் எடுத்துக்கொள்ள நினைக்காத உணவு சுவை கசப்பு. கசப்பு என்றால் நினைவுக்கு வருவது பாகற்காய். ஆனால் பாகற்காய் நீரிழிவு நோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தினசரி உணவீல் பாகற்காய் சேர்த்துக்கொள்வது நல்லது. கூட்டாகவோ, குழம்பாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ பாகற்காயை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு எடுத்துக்கொள்ளும்போதும் தினம் தினம் உடலில் சேரும் சர்க்கரை குறைக்கப்படும். அதேபோல் உடல் எடை குறைப்புக்கும் பாகற்காய் முக்கியமாக பயன்படுகிறது. இதன் காரணமாக பாகற்காய் மற்றும் சுண்டக்காய் போன்ற கசப்பான உணவுகளை எடுத்துக்கொள்து நல்லது.
அதேபோல் வெந்தயம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக பயன்படுகிறது. நீரிழிவு நோய் வந்துவிடும் என்ற பயம் உள்ளவர்கள் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு காலை மாலை இரு வேளையும் அனை டீஸ்பூன் சாப்பிட்டு வரலாம். வெந்தயத்தை தினமும் எடுத்துக் கொள்ளும்போது உடலில் பல்வேறு வகையாக நன்மைகள் பயக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil