scorecardresearch

புரதம், நார்ச்சத்து… சுகர் கன்ட்ரோலுக்கு இந்தப் பழம் ட்ரை பண்ணுங்க!

உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். பழங்கள் மற்றும் மூலிகைகள் இதற்கு முக்கிய பயனை தருகின்றன.

புரதம், நார்ச்சத்து… சுகர் கன்ட்ரோலுக்கு இந்தப் பழம் ட்ரை பண்ணுங்க!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது நீரிழிவு நோய். உடலில் ரத்த சர்க்கரை அளவு சமநிலை தவறும்போது இந்நோய் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பலரும் பல வழிகளை பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலானோர் ஆங்கில மருத்துவ முறைகளை கடைபிடித்து வருகின்றனர்.

அதே சமயம் இயற்கையில் கிடைக்கும் பழங்கள் மூலிகைகள் மற்றும் உணவு பழக்கங்களை மாற்றி அமைப்பதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. மேலும் நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டுவராவிட்டால், இதயநோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்.

இதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். பழங்கள் மற்றும் மூலிகைகள் இதற்கு முக்கிய பயனை தருகின்றன. அந்த வகையில் டிராகன் பழம் நீரிழிவு நோய்க்கு சிறந்த உணவாக உள்ளது. ஆரோக்கியமான கலோரிகள், புரதம் ஜீரா கொழுப்புகள், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து அதிகம் உள்ள டிராகன் பழம், உடலுக்கு வைட்டமின் சி, இரும்புச்சத்து, மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் கிடைக்க வழி செய்கிறது.

டிராகன் பழம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது எப்படி?

ஒருவகை கற்றாழை தாவரத்தில் இருந்து கிடைக்கும் டிராகன் பழம், நீரிழிவு நோயை எதிர்த்து போராடும் தன்மை கொணடது. இப்படத்தை சாப்பிடும்போது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, உடல் பருமனை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும், ப்ரீடியாபயாட்டீஸ் மற்றும் வகை 2 நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டுவரும் திறன் கொண்டது.

டிராகன் பழம் தரும் நன்மைகள்

குறைந்த அளவு கொழுப்பு உள்ளதால் டிராகன் பழம் உடலில் கொலஸ்டாராலை அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை. இதனால் இதய நோய் பாதிப்பு குறைகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் டிராகன் பழத்தை ஜூஸ் செய்து சாப்பிடும்போது நல்ல பலன் கிடைக்கும்.

இதில் அதிக நார்ச்சத்து அடங்கியுளளதால், கனேரி, தமனி நோய், மற்றும் இதயநோய் அபாயத்தை குறைக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் டிராகன் பழம், நார்ச்சத்து நிறைந்துளளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் டிராகன் பழம் முக்கியத்தவம் பெறுகிறது. இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், தாதுக்கள் அதிகளவில் உள்ளது. இதனால் உடலில் பல நோய்களை எதிர்த்து போராடுவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது.

நீரிழிவு நோயாளிகள் டிராகன் பழம் மற்றும் அதை சார்த்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து எடுத்துக்கொள்வது நல்லது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Tamil health dragon fruit benefits for diabetes patients