உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரை வகைகளில் முக்கியமானது முருங்கை கீரை. இதனை கடைந்தும் சாப்பிடலாம். அதே சமயம் பொரியல் செய்தும் சாப்பிடலாம். பொரியல் செய்யும்போது பைத்தம் பருப்பு சேர்த்து செய்தால், அதன் சுவையே தனி ரகமாக இருக்கும். முயற்சி செய்து பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கொத்து
வெங்காயம் நறுக்கியது - ஒரு கைப்பிடி
பைத்தம் பருப்பு - 3 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பெங்காயத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
முருங்கை கீரை - ஒரு கப்
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் காய்ந்த மிளகாய், கடுகு, பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
அதன்பிறகு நறுக்கிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, அடுத்து பைத்தம் பருப்பை சேர்த்து கிளரவும். அடுத்து உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.
அடுத்து இந்த கலவையில், கழுவி வைத்திருக்கும் ஒரு கப் முருங்கை கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும். 8-10 நிமிடங்கள் வதக்கினால், சுவையான முருங்கை கீரை பொறியல் ரெடி.
இந்த பொரியலை சமைக்கும்போது உப்பு அதிகமாகி போனால், ஒரு கைப்பிடி தேய்ங்காய் துருவலை அதில் சேர்த்தால, அதிகமான உப்பை தேங்காய் இழுத்துவிடும். பொரியலும் சுவையாக இருக்கும்.