பெரும்பாலான வீடுகளில் தக்காளி சாதம் வாரத்திற்கு ஒரு முறை மதிய உணவுக்கு, குறிப்பாக லஞ்ச் பாக்ஸிற்கு, கட்டாயம் இருக்கும். அந்த வகையில், தக்காளி புலாவ் எப்படி எளிமையாகவும் விரைவாகவும் செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
நெய்
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
பிரிஞ்சி இலை
வெங்காயம்
பச்சை மிளகாய்
புதினா
இஞ்சி பூண்டு விழுது
தக்காளி
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
உப்பு
பாஸ்மதி அரிசி
முந்திரி பருப்பு (வறுக்க)
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடாக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இரண்டு பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். ஒரு கைப்பிடி புதினாவைச் சேர்த்து நன்கு கிளறவும். ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
மூன்று தக்காளியை அரைத்து விழுதாக்கி வைத்திருக்கிறேன். அதையும் சேர்த்து நன்கு கிளறி விடவும். மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும். கூடவே ஒரு டேபிள்ஸ்பூன் உப்பையும் சேர்த்து நன்கு கிளறவும். தக்காளியின் பச்சை வாசனை நீங்கி, எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
இந்த அளவுக்குத் தயாரானதும், இப்பொழுது ஊறவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி ஊறவைத்திருந்தேன். ஊறவைத்த தண்ணீருடன் அப்படியே குக்கரில் சேர்த்து, இரண்டு விசில் வரும் வரை பிரஷர் குக் செய்யவும். சாதம் வெந்ததும், நெய்யில் வறுத்த முந்திரி பருப்பைச் சேர்த்து பரிமாறவும். இதன் சுவை "அல்டிமேட்" ஆக இருக்கும்!