உணவே மருந்து என வாழ்ந்த காலம்போய் தற்போது, ஒவ்வொரு வேளையும் மாத்திரைகளை உணவாக உட்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இன்றைய வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றத்தால் பல்வேறு வகையான நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகி தினமும் பல மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் நிலைக்கு பலர் வந்துவிட்டனர்.
Advertisment
குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னையாக சர்க்கரை நோய் உள்ளது.இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள், தங்கள் உணவில் கட்டுப்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம். மேலும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பது குறித:து பல மருத்துவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
அதேபோல், சர்க்கரை நோயாளிகள் அமர்ந்தே இருக்கக் கூடாது. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இரண்டு முதல் ஐந்து நிமிடம் எழுந்து நிற்க வேண்டும். இதனால் ஒன்பது சதவீதம் சர்க்கரை அளவு குறையும். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை நிற்பதற்கு பதிலாக நடந்தால் 20 சதவீதம் இந்த சர்க்கரை அளவுகளை குறைக்க முடியும். அதேபோல், உடலில் விரைவாக சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
Advertisment
Advertisements
அதே சமயம், சர்க்கரை நோயாளிகள் கீரை வகைளை அதிகம் எடுத்துக்க்கொள்ள வேண்டும். குறிப்பாக நமக்கு எளிதில் கிடைக்ககூடிய முருங்கை கீரையை தவிர்க்கவே கூடாது. உலகம் முழுவதும் முருங்கை கீரை மாத்திரை வடிவத்தில், ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் நாம் அதனை கண்டுகொள்வதே இல்லை. தினமும் முருங்கைக கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய நன்மை தருவதாக அமையும் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.