ஒவ்வொரு மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும் உணவு ஒரு இன்றியமையாத தேவை. சரியான நேரத்திற்கு சாப்பிடுவது, சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது என்று இருந்தாலும், காலை உணவை சரியான முறையில் சத்தான உணவாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இரவு முழுவதும் சாப்பிடாமல் தூங்கும் நமக்கு, காலை உணவு தான் அன்றைய தினம் முழுவதும் நாம் இயங்குவதற்கான சக்தியை கொடுக்கும்.
இதன் காரணமாக காலை உணவை சரியான நேரத்திலும், அதே சமயத்தில் சத்தான உணவாகவும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதிரும் குறிப்பாக நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால், உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் தங்களது உணவில் மாவுச்சத்தை குறைத்துக்கொண்டு புரதம் அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் நீங்கள் தினமும் காலையில் 4 இட்லி சாப்பிடுவதற்கு 2 இட்லி 2 முட்டை சாப்பிடலாம். அதேபோல் 4 தோசை சாப்பிடுவதற்கு பதிலாக 2 முட்டை தோசையை சாப்பிடலாம். இதனுடன் நிலக்கடலை அல்லது தேங்காய் சட்னியை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த உணவில் கொழுப்பு மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. மாவுச்சத்து பாதியாக குறைந்துவிடும். அந்த உணவுமுறைககள் மிதமான சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே சரியாக இருக்கும்.
அதேபோல் மதியம் சாப்பாடு அதிகம் சாப்பிடுகிறீர்கள் என்றால் அதனை குறைத்துக்கொள்ளுங்கள். இந்த உணவுடன் முட்டை, சிறு தானியம், நான்வெஜ் இதனுடன் எடுத்துக்கொள்ளலாம். மாலையில் பஜ்ஜி போண்டா போன்ற உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக நட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். பாதாம், நிலக்கடலை, தேங்காய் துண்டு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். இரவு உணவிலும் பாதியாக குறைத்துக்கொண்டு, முட்டை, சிக்கன், பயறு வகைகளை சேர்த்துக்கொளளலாம் என்று டாக்டர் அருண்குமார் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“