எண்ணெய் இல்லாமல் சமைப்பது என்பது ஒரு சவாலான காரியம் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது எளிதானது தான். அதற்கு எடுத்துக்காட்டாக இந்த ரெசிபியை நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க. இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான மஷ்ரூம் மசாலா சப்பாத்தி, புல்கா, பரோட்டா, சாதம் அல்லது தோசை மற்றும் இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிடலாம். வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாமல் இந்த மசாலாவை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
தக்காளி - 2
முந்திரி - 6
சிவப்பு மிளகாய் - 5-6 மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
காளான் - 75 கிராம் (நறுக்கியது)
கரம் மசாலா - 1.5 தேக்கரண்டி
கஸ்தூரிரி மேத்தி - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் 2 தக்காளிகள், 6 முந்திரிகள், 5-6 சிவப்பு மிளகாய், மற்றும் 1 தேக்கரண்டி மல்லித்தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். இதை மென்மையான பசை போல அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு சூடான கடாயில் சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் 1 தேக்கரண்டி உப்பு சேர்க்கவும். இந்தக் கலவையை நன்கு கொதிக்க விடவும். தக்காளியின் பச்சை வாசனை முழுமையாக மறையும் வரை கொதிக்க விடவும்.
பச்சை வாசனை நீங்கியதும், நறுக்கிய காளான்களைச் சேர்த்து நன்கு கலக்கவும். காளான்கள் வேகும் வரை சமைக்கவும்.காளான்கள் வெந்ததும், 1.5 தேக்கரண்டி கரம் மசாலா மற்றும் சிறிதளவு கசூரி மேத்தி சேர்த்து நன்கு கிளறவும். இப்போது உங்கள் சுவையான ஜீரோ ஆயில் மஷ்ரூம் மசாலா தயார்! சூடாக சப்பாத்தி அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.